டெல்லியில் நிலவும் மாசை கட்டுப்படுத்தவும் சாலை நெரிசலை குறைக்கவும் அம்மாநில அரசு ’ஆட்-ஈவன்’ டிரைவிங் சிஸ்டத்தை அமல்படுத்தியது. இந்த சிஸ்டத்தின்படி ஆட் (ஒற்றைப்படை) எண்கள் கொண்ட நாள்களில் ஒற்றைப்படை எண்கள் கொண்ட வாகனங்கள் சாலையில் செல்ல அனுமதிக்கப்பட்டது. ஈவன் எண்கள் கொண்ட நாள்களில் ஈவன் எண்கள் கொண்ட வாகனங்கள் சாலையில் செல்ல அனுமதிக்கப்பட்டது. இந்தத் திட்டம் இன்று முதல் மீண்டும் அமலுக்குவருகிறது.
இத்திட்டத்தினை செயல்படுத்த டெல்லி போக்குவரத்துக் காவல்துறையைச் சேர்ந்த 200 அணிகள் மாநிலம் முழுவதும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஐந்தாயிரம் தன்னார்வ தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. டெல்லியில் காற்று மாசு அபாய நிலையை தாண்டியதைத் தொடர்ந்து இந்தத் திட்டத்தினை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவுறுத்தியுள்ளார்.
நவம்பர் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாது. மற்ற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும்.
எந்தெந்த வாகனங்களுக்கு இத்திட்டத்திலிருந்து விலக்கு?
- அவசர மருத்துவச் சேவைக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள்,
- பள்ளிச் சீருடை அணிந்த குழந்தைகள் செல்லும் வாகனங்கள்,
- பெண்கள் மட்டும் பயணம் செய்யும் வாகனங்கள்,
- மாற்றுத் திறனாளிகள், 12 வயத வரையிலான குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள்
இந்தத் திட்டத்தை கடைப்பிடிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'போக்குவரத்துத் தொழிலாளர்கள் வரும் 5ஆம் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும்' - சந்திரசேகர ராவ் கெடு