தெலங்கானா மாநிலம் பத்ராச்சலம் வன சோதனைச் சாவடியில் உதவி காவல் ஆய்வாளர் மகேஷ் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) காவல் ஆய்வாளர் சுந்தரம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒடிசாவிலிருந்து வந்த காரில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 200 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்து புர்லா ஸ்ரீகாந்த், அனிருத், வினய் ஆகிய மூவரை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 14 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு: 4 பேர் போக்சோவில் கைது!