மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவிலுள்ள பவானிப்பூர் எனும் இடத்தில் குத்துச்சண்டை கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இங்கு, வீரர், வீராங்கனைகள் தினந்தோறும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இங்குப் பயிற்சி பெற்று வந்த சட்டக் கல்லூரி மாணவியான ஜோதி பிரதான்(20) திடீரென்று நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.
இதனையடுத்து, அவரை பரிசோதனை செய்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.