ETV Bharat / bharat

கரோனா: பிறந்து 20 நாள்களே ஆன குழந்தை உயிரிழப்பு

author img

By

Published : May 2, 2020, 3:14 PM IST

ஜெய்ப்பூர்: கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட 20 நாள் குழந்தை உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குழந்தை
குழந்தை

கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகிரித்துவருகிறது. பிறந்த குழந்தையிலிருந்து வயதான முதியவர்வரை அனைத்து தரப்பினரும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட 20 நாள் குழந்தை ராஜஸ்தான் மாநிலத்தில் உயிரிழந்துள்ளது. கரோனா தொற்றால் உலகில் மிகக் குறைந்த வயதில் உயிரிழந்த குழந்தையாக இக்குழந்தை கருதப்படுகிறது.

காய்ச்சலால் பாதிப்படைந்த அந்த ஆண் குழந்தை மே 1ஆம் தேதி அதிகாலை ஜே.கே.லோன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. செப்டிசீமியாவால் பாதிக்கப்பட்டு உடல் வீக்கம் அடைந்த நிலையில், அக்குழந்தை காலை 9 மணிக்கு உயிரிழந்தது. மருத்துவ பரிசோதனை செய்து பார்க்கையில் அக்குழந்தைக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ராஜஸ்தான்
ராஜஸ்தான்

முன்னதாக, அமெரிக்காவில் பிறந்து ஆறு வார காலமே ஆன குழந்தை கரோனா தொற்றால் உயிரிழந்தது. உலகில் மிகக் குறைந்த வயதில் உயிரிழந்த குழந்தையாக அக்குழந்தை பார்க்கப்பட்டுவந்தது.

இதையும் படிங்க: கோவிட் - 19: கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கும் குழுவில் மாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.