ETV Bharat / bharat

காஷ்மீரில் அத்துமீறல்: பாகிஸ்தானைச் சேர்ந்த 2 வீரர்களை சுட்டுவீழ்த்திய இந்திய பாதுகாப்புப் படை!

ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் சுட்டுவீழ்த்தப்பட்டனர்.

JK
JK
author img

By

Published : Dec 21, 2019, 7:45 PM IST

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் அமைந்துள்ள அக்னூர் செக்டாருக்கு உட்பட்ட கவுர், பலன்வாலா பகுதிகளில் நள்ளிரவு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய பாதுகாப்புப் படையினர் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, இந்திய பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். பலமணி நேரம் நடைபெற்ற இந்தத் துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் தேவேந்திர ஆனந்த், "அக்னூர் செக்டாரில் போர் நிறுத்த விதிகளை மீறி நள்ளிரவு இந்திய பாதுகாப்புப் படையினர் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியது.

இதேபோன்று, சுன்தர்பானி செக்டாரில் உள்ள கேரி பாட்டால் பகுதியிலும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து, இந்திய பாதுகாப்புப் படை அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்தது" எனத் தெரிவித்தார்.

மேலும், தொடர்ந்து இருதரப்பினருக்குமிடையே மோதல் நிலவிவருவதால் பொதுமக்கள் பதுங்கு குழிகளுக்கு செல்ல வேண்டுமென்றும் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படாமலிருக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : லண்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய பிரெக்ஸிட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.