உத்தரப் பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் லால்மன் நிசாஷ் (40), தயாராம் (65). இவர்கள் இருவரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.
இதுகுறித்து ஜஸ்பூர் காவல் ஆய்வாளர் பால்ஜித் சிங் கூறுகையில், “ஜஜ்ரிபுர்வா கிராமத்தைச் சேர்ந்த லால்மன் நிசாஷ், காசநோயால் அவதிப்பட்டு வந்தார். ஆனால், அவருடைய சிகிச்சைக்குப் போதிய பணவசதி அவரிடம் இல்லை. இதனால் உடல்நலம் மட்டுமில்லாது மன அழுத்தமும் அதிகமான நிலையில், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றார்.
நிசாஷின் மகன் ராம்சந்திரா கூறுகையில், ”என் தந்தைக்கு சிகிச்சை அளிக்குமளவுக்கு எங்களிடம் வசதியில்லை. அவர் இதனால்கூட தற்கொலை செய்திருக்கலாம்” என்றார்.
தயாராமினுடைய தற்கொலை குறித்து காவல் ஆய்வாளர் வினோத் குமார் கூறுகையில், ”சிக்ரி கிராமத்தைச் சேர்ந்த தயாராமின் குடும்பம் ஊரடங்கினால் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளனர். வறுமையின் கோரப்பிடியால் தயாராம் தற்கொலை செய்துகொண்டுள்ளார்” என்றார்.
இதையும் படிங்க: பாலியல் இச்சைக்கு இசைந்துகொடுக்காத பெண்ணை கொன்றவர் கைது!