தென் கொரியாவின் தெற்கு ஜியோலா மாகாணத்தில் கடல் பகுதியில் எண்ணெய் இருந்த கப்பலில் திடீரென தீப்பிடித்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடற்படை வீரர்கள், விபத்தில் சிக்கிக் கொண்ட ஆறு பேரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
எனினும், நான்கு பேரை மட்டுமே கடற்படை வீரர்களால் பத்திரமாக மீட்க முடிந்தது. எஞ்சிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து கடற்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
சுமார் 10 ஆயிரம் டன் எண்ணெய் இருந்த கப்பலில் தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.