இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தினந்தோறும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு மத்திய,மாநில அரசுகள் அறிவுறுத்திவருகிறது.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் கரோனாவால் ஒரே நாளில் 19 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதனால், அம்மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 165ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இதையும் படிங்க: ஜப்பானில் அவசர நிலை பிரகடனம்!