ETV Bharat / bharat

கோவிட்-19 நிலவரம்: ஒரே நாளில் 18,645 பேருக்குப் பாதிப்பு

கடந்த 24 மணிநேரத்தில் 18 ஆயிரத்து 645 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் 201 பேர் கரோனா பாதிப்புக் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

COVID-19
COVID-19
author img

By

Published : Jan 10, 2021, 2:52 PM IST

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 18 ஆயிரத்து 645 நபர்களுக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் 201 பேர் கரோனா பாதிப்புக் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

கோவிட் - 19 நிலவரம்:

இந்தியாவில், இதுவரை ஒரு கோடியே நான்கு லட்சத்து 50 ஆயிரத்து 284 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டு லட்சத்து 23 ஆயிரத்து 335 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 999 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து 20ஆவது நாளாக நாட்டில் கோவிட்-19ன் தற்போதைய பாதிப்பு(Active cases) எண்ணிக்கை மூன்று லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.

பரிசோதனை நிலவரம்:

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (ஜன. 10) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 8 லட்சத்து 43 ஆயிரத்து 307 நபர்களுக்குப் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதுவரை மொத்தம் 18 கோடியே 10 லட்சத்து 96 ஆயிரத்து 622 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அடுத்த மூன்று மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி- இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.