கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு மே மூன்றாம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், பொது போக்குவரத்துகள் மூடங்கியுள்ளன. அத்தியாவசிய, அவசிய தேவைகளுக்கும் பொதுமக்கள் தங்களது சொந்த வாகனத்திலேயே செல்லும் சூழல் உள்ளது.
இந்நிலையில், மத்தியப் பிரதேசம் மாநிலம் பெதுலில் சகோதரருடன் தனது கிராமத்திற்கு இரவு நேரத்தில் சென்றுகொண்டிருந்த பெண்னை ஏழு பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஏழு பேரில் மூவர் சிறார்கள் ஆவர்.
இதுகுறித்து கோட்வாலி காவல் நிலைய பொறுப்பாளர் ராஜேந்திர துர்வே கூறுகையில், "தனது கிராமத்திற்கு, தனது சகோதரருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர்களை வழிமறித்த கும்பல், அப்பெண்ணின் சகோதரரை கிணற்றில் தள்ளிவிட்டுள்ளனர். மேலும் அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதன் பெயரில், கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது." எனக் கூறினார்.
இதையும் பார்க்க: பிரதமருக்கு கரோனா: அதிர்ச்சியில் ரஷ்ய தலைவர்கள்!