ETV Bharat / bharat

17 வயது சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்து உயிருடன் எரித்த கொடூரம்! - 17-year-old girl raped, set on fire by man

ஹைதராபாத்: இளைஞர் ஒருவரு 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து உயிருடன் தீ வைத்துக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஹைதராபாத்
ஹைதராபாத்
author img

By

Published : Feb 29, 2020, 7:51 PM IST

தெலங்கானாவில் சூர்யாபேட்டை மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்தது மட்டுமின்றி, தீ வைத்துக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியை இளைஞர் ஒருவர், பல நாள்களாக காதலிப்பதாகத் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர், அந்த இளைஞரை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையறிந்த அந்த இளைஞர், கதவை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்று சிறுமியை வலுக்கட்டாயமாக வீட்டின் வெளியே இழுத்து வந்துள்ளார். இதையடுத்து சிறுமியை வலுக்கட்டாயமாக வற்புறுத்தி பாலியல் வன்புணர்வில் செய்துள்ளார். இதுமட்டுமின்றி தீ வைத்து சிறுமியை உயிருடன் கொளுத்தியுள்ளார்.

இந்நிலையில், சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்ட அப்பகுதி மக்கள், உடனடியாக விரைந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். 50 சதவிகிதம் உடல் எரிந்த நிலையில் சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் குற்றவாளியைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: கீறிப்பாறை வனப்பகுதியில் திடீர் காட்டுத்தீ - வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.