ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மிரில் சனிக்கிழமை நள்ளிரவு உணவின் போது பரிமாறப்பட்ட பால் உட்கொண்டதால் அரசுப் பள்ளியின் பதினேழு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு குமட்டல், வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வயிற்றுப் பிடிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அர்ஜுன் பூரா கல்சா பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அந்தக் குழந்தைகளின் நிலை சீராக உள்ளது. இதுகுறித்து தலைமை மருத்துவ சுகாதார அதிகாரி (சி.எம்.எச்.ஓ) கே.கே.சேனி கூறுகையில், "பதினேழு குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இப்போது சீராக உள்ளனர். அவர்கள் உட்கொண்ட உணவின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதனை நாங்கள் ஆய்வு செய்துவருகிறோம். மருத்துவ குழு இருப்பிடத்தில் உள்ளது” என்றார்.
இதையும் படிங்க: சூடான தேநீர், இதமான இளநீர்! - ட்ரம்ப் சுவாரஸ்ய உணவுப் பழக்கம்!