ETV Bharat / bharat

டெல்லியில் 164 பன்றிக்காய்ச்சல் பாதிப்பு!

டெல்லி : தலைநகர் டெல்லியில் 164 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக, தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் (NCDC) தகவல் வெளியிட்டுள்ளது.

164 cases of swine flu reported from Delhi
164 பன்றிக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக நோய் கட்டுப்பாட்டு மையம் தகவல்!
author img

By

Published : Feb 22, 2020, 9:12 PM IST

இதுதொடர்பாக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் நாள்தோறும் குறைந்தது பன்றிக் காய்ச்சலால் பாதிப்படைந்த எட்டு நோயாளிகள் அனுமதிக்கப்படுவதும், இந்த காய்ச்சலால் இதுவரை எந்த இறப்பும் பதிவாகவில்லை என்பதும் அறிய முடிகிறது.

மேலும் இது தொடர்பாக நமது ஈடிவி பாரத்திடம் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் தேஷ் தீபக் கூறுகையில், "பன்றிக் காய்ச்சலின் ஆரம்ப அறிகுறிகளில் இருமல், சளி, தொண்டையில் எரிச்சல், தசை வலி, சோர்வு ஆகியவை அடங்கும். நீடித்த காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து பரிசோதனை செய்ய வேண்டும். சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அதனை புறக்கணிக்கக்கூடாது" என்று தெரிவித்தார்.

164 cases of swine flu reported from Delhi
தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட புள்ளிவிவரம்.

கடந்த 2019 ஆம் ஆண்டில், எச்1என்1 வைரஸ் பாதிப்பால், நாடு முழுவதும் 1,218 பேர் இறந்துள்ளனர். குறிப்பாக, டெல்லியில் 3,627 பேர் எச்1என்1 பாதிப்புக்குள்ளாகியதும், அதில் 31 பேர் இறந்துள்ளதாகவும் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

பன்றிக் காய்ச்சல் என்பது இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் எனும் நுண்ணுயிரியால் ஏற்படும் சுவாசத் தொற்று நோயாகும். இது அசுத்தமான நீரை அருந்துதல், அசுத்தமான காற்றின் மூலமும் பரவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அதே பிஷப்... புகார் புதுசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.