டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட இந்தோனேசிய பெண் மதகுருமார்கள் ஐவர் உள்பட 15 பேர் உத்தரப் பிரதேசத்தில் பதுங்கியிருப்பதாகச் சாஹிபாபாத் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் சம்மந்தப்பட்ட பகுதியில் காவலர்கள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அவர்களின் இருப்பிடம் கண்டறியப்பட்டது. அனைவரும் அங்குள்ள மதரஸாக்கள், மசூதிகளில் தங்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பது தொடர்பாக பரிசோனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவரகள் அனைவருக்கும் தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அனைவரையும் வீடுகளில் அடைத்து காவலர்கள் தனிமைப்படுத்தினர்.
தனிமைப்படுத்தப்பட்ட 15 பேரில் பத்து பேர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள ஐந்து பேர் இந்தியர்கள் என கூறப்படுகிறது. இவர்கள் மீது வெளிநாட்டு சட்ட விதி மீறல் மற்றும் குற்ற வழக்குகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் மாவட்ட காவல்துறை செய்தித் தொடர்பாளர் சோஹன்வீர் சிங் சோலங்கி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தீப்பற்றக்கூடியதா ஆல்கஹால் கலந்த கிருமிநாசினிகள், சானிடைசர்?