ETV Bharat / bharat

நாட்டின் எல்லையில் நேபாளத்தைச் சேர்ந்த 15 பேர் கைது!

author img

By

Published : Apr 25, 2020, 12:39 PM IST

பாட்னா: இந்தியா - நேபாளம் எல்லை பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்த நேபாளத்தைச் சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

15 Nepalese nationals apprehended at Indo-Nepal border

கரோனா வைரஸ் பெருந்தொற்று உலகநாடுகளை அச்சுறுத்திவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக பல நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அதன் ஒருபகுதியாக, இந்தியாவில் கடந்த மார்ச் 25 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இதனால், அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்ட நிலையில், பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, இந்தியா - நேபாளம் எல்லைப் பகுதியான பீகாரின் மதுபானி மாவட்டத்தையடுத்து உள்ள ஜெயாநகர் பகுதியில் சட்டவிரோதமாக நேபாளத்தைச் சேர்ந்த 15பேர் நுழைந்தனர்.

இது குறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல் துறையினர் நேபாளத்தைச் சேர்ந்த 15 பேரையும் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.

மேலும், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்கள் நேபாளத்தின் தனுஷா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவர்கள் அனைவரும் தனிமை்பபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: உள்நாட்டு சோதனைக் கருவிகளை ஐசிஎம்ஆர் அனுமதிக்க வேண்டும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.