டெல்லியில் கரோனா பாதிப்புக்குள்ளான 15 பேரும் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த வீரர்கள் எனவும், 31ஆவது பட்டாலியனைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிகிறது. ஏற்கெனவே இதே குழுவைச் சேர்ந்த ஒன்பது பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் சிஆர்பிஎஃப் மூத்த அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் மாண்டால்வாலி பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், அந்த மூத்த அலுவலர் தெரிவித்தார்.
மேலும், இக்குழுவைச் சேர்ந்த மற்ற வீரர்களிடம் பரிசோதனையைச் செய்துள்ளதாகவும், முடிவுகளுக்கு காத்திருப்பதாகவும் அந்த அலுவலர் கூறினார்.
இதையும் படிங்க : கரோனா: டெல்லியில் பிளாஸ்மா சிகிச்சை முறையால் குணமடைந்த நபர்