ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370, 35ஏ பிரிவுகள் ரத்துசெய்யப்பட்டன. இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த திங்கள்கிழமை (ஆகஸ். 5) பிறப்பித்தார்.
மேலும், அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் (சட்டப்பேரவையுடன்), லடாக் (சட்டப்பேரவை அல்லாது) என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.
இதனிடையே, காஷ்மீரில் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தொலைபேசி, இணையதள சேவை துண்டித்து, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ, துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், வரும் திங்கள்கிழமை பக்ரீத் பண்டிகையையொட்டி 144 தடை உத்தரவை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. அதில், ஆகஸ்ட் 10 முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கலாம் என்று குறிப்பிடிருந்தது. அதன்படி, காஷ்மீரில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பியதால் இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன.