ஒடிசா மாநிலத்தில் 141 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று (ஜூன்2) அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மொத்தமாக 2 ஆயிரத்து 245 பேராக, உள்ளதாக சுகாதாரத் துறை அலுவலர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது; 'புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் 110 பேர் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். மேலும் இந்தப் புதிய பாதிப்புகள் 18 மாவட்டங்களில் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக கஞ்சம் மாவட்டத்தில் 27 பேரும், குர்தா மாவடத்தில் 26 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 991ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் 1,245 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் ஏழு பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், அவர்கள் கரோனா தொற்றால் இறக்கவில்லை.
நேற்று (ஜுன் 1) ஒருநாள் மட்டும் 156 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,59,567 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதில் கஞ்சம் மாவட்டத்தில் 458 பேரும், ஜஜ்பூர் மாவட்டத்தில் 290 பேரும், குர்தா மாவட்டத்தில் 167 பேரும், பாலசோர் மாவட்டத்தில் 154 பேரும், கேந்திரபரா மாவட்டத்தில் 152 பேரும், கட்டாக் மாவட்டத்தில் 126 பேரும், பத்ரக் மாவட்டத்தில் 120 பேரும் என கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இம்மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களில் தெற்கு ஒடிசாவின் ராயகடா மட்டுமே கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.