கொல்கத்தா மாநிலம் லால் பஜார், எஸ்ரா தெருவில் போலி சானிடைசரை விற்பனை செய்துவருவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்று காவல் துறையினர், அங்கு சோதனை செய்தனர். சோதனையில் அங்குள்ள இரண்டு கடைகளில் சுமார் 1,400 லிட்டர் போலி ரசாயனம் கலந்த சானிடைசர் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், "உரிய ஆவணங்கள் இன்றி சானிடைசர் விற்பனை செய்துவந்த இருவரைக் கைது செய்துள்ளோம். மேலும், அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 1,400 லிட்டர் போலி சானிடைசர்களை பறிமுதல் செய்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.