ETV Bharat / bharat

வெளிநாடுகளிலிருந்து புதுச்சேரி வருபவர்களுக்கு 14 நாள்கள் தனிமைப்படுத்தல் கட்டாயம்! - COVID-19 Symptoms

புதுச்சேரி: வெளிநாடுகளிலிருந்து வரும் புதுச்சேரி மக்கள் அனைவரும் கட்டாயம் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர் என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார்.

health minister
health minister
author img

By

Published : May 21, 2020, 6:10 PM IST

இதுகுறித்துப் பேசியுள்ள அவர், ”கரோனாவால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி மாநில அரசு மருத்துவமனைகளில் 17 பேர், ஜிப்மரில் இரண்டு பேர் என மொத்தம் 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மாநில சுகாதாரத் துறைக்கு மிகவும் கடினமான நேரமாகும். மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்ததை அடுத்து வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து புதுச்சேரியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஊர் திரும்புகின்றனர்.

இனிதான் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவ்வாறு வருபவர்கள் விமான நிலைய சோதனையில் தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டு, புதுச்சேரி வந்தபிறகு அவர்களுக்கு நோய்த்தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. எனவே வெளிநாடுகள் மற்றும் சிவப்பு மண்டல மாவட்டங்களிலிருந்து புதுச்சேரி வருபவர்கள் கண்டிப்பாக 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

தற்போது வரை புதுச்சேரி மாநிலத்தில் 5,960 பேருக்கு உமிழ்நீர் சோதனை மேற்கொண்டதில் 5,889 பேருக்கு கரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. மற்ற நாடுகளிலிருந்து நமது மாநிலத்திற்கு வரக்கூடியவர்களால் நோய்த்தொற்று வர வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் கிடுகிடுவென உயரும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை - பொதுமக்கள் பீதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.