காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி கர்நாடகாவில் கடந்த ஒரு வருட காலமாக ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில், அக்கூட்டணியைச் சேர்ந்த 14 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளனர். இதனால் அங்கு காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறுகையில், "மக்கள், மாநில நலனை கருத்தில் கொண்டே சரியான தருணத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்" என்றார். ராஜினாமா செய்துள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவை, ராஜ் பவனில் சந்தித்து பேசி வருகின்றனர்.