ETV Bharat / bharat

'2017-19ஆம் ஆண்டுக்கு இடையே விலங்குகள் கடத்தல், வேட்டையாடுதல் தொடர்பாக 1,256 வழக்குகள் பதிவு' - மத்திய அமைச்சர்

டெல்லி: கடந்த 2017- 2019ஆம் ஆண்டுக்கு இடையே சட்டவிரோதமாக நடைபெற்ற விலங்குகள் கடத்தல், வேட்டையாடுதல் தொடர்பாக 1,256 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Sep 20, 2020, 2:26 PM IST

arr
areare

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சிபிஐ எம்.பி., பினாய் விஸ்வாம், மத்திய அமைச்சரிடம் சட்டவிரோதமாக கடத்தல் மற்றும் ஆபத்தான விலங்குகளை கொலை செய்த வழக்குகள் குறித்தும், கடந்த மூன்று ஆண்டுகளில் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்தும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். மேலும், இந்த சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க அமைச்சகம் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் கேட்டார்.

இதற்கு பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ, "கடந்த 2017- 2019ஆம் ஆண்டுக்கு இடையே சட்டவிரோதமாக நடைபெற்ற விலங்குகள் கடத்தல், வேட்டையாடுதல் தொடர்பாக 1,256 வழக்குப் பதிவும், 2313 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தகவலின்படி,2017 ஆம் ஆண்டில் 478 சட்டவிரோத கடத்தல் மற்றும் வனவிலங்குகளை கொலை செய்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பின்னர், 2018 இல் 492 வழக்குகளும், 2019 இல் 286 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2017இல் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை 880 ஆகவும், 2018 இல் 858 ஆகவும், 2019 ல் 575 இருந்தன. மொத்தமாக மூன்று ஆண்டுகளில் 1,256 வழக்குப்பதிவும், 2313 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், வனவிலங்குகளின் வாழ்விடங்களை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதற்கான மத்திய நிதியுதவித் திட்டங்களின் கீழ் மாநில அரசுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. வனவிலங்கு குற்றங்களை எதிர்ப்பதில் நிறுவனங்களுக்கு இடையேயான அமலாக்க முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்காக இடை-நிறுவன கூட்டங்களை ஏற்பாடு செய்யப்பட்டன. 2017-18 ஆம் ஆண்டில் 10 கூட்டங்களும், 2018-19 ஆம் ஆண்டில் 9 கூட்டங்களும், 2019-20 ஆம் ஆண்டில் 7 கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.