உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியாவைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியையின் மகனான மிரிஜேந்திர ராஜ் என்ற 12 வயது சிறுவன் தனது ஆறாம் வயதிலேயே புத்தகம் எழுதத் தொடங்கினான்.
அவன் எழுதிய முதல் புத்தகம் கவிதைகளின் தொகுப்பு. ஆன்மிகம், வரலாறு பற்றி புத்தகம் எழுதுவதில் ஆர்வம் கொண்ட சிறுவன் மிரிஜேந்திர ராஜ் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகத்தையும் எழுதியுள்ளான்.
மிரிஜேந்திர ராஜிற்கு 'இன்றைய அபிமன்யூ' என்ற புனைப்பெயரும் உண்டு. இப்பெயர் சிறுவனின் சாதனையை போற்றும்விதமாக வழங்கப்பட்டது. சிறுவயது புத்தக ஆசிரியர் உள்பட நான்கு உலக சாதனைகளை சிறுவன் படைத்துள்ளான்.
மிரிஜேந்திர ராஜுவின் ஒவ்வொரு புத்தகமும் 25 முதல் 100 பக்கங்கள் வரை இருக்கும். சிறுவனின் திறமையால் லண்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற அவனுக்கு அழைப்பு வந்தது நோக்கத்தக்கது.
சிறுவன் ராமாயணத்தில் உள்ள 51 கதாபாத்திரங்களை பற்றி படித்துக்கொண்டு இருப்பதாகவும் அந்தக் கதாபாத்திரங்களை பற்றி புத்தகம் எழுதப்போவதாகவும் தெரிவித்துள்ளான். தான் ஒரு எழுத்தாளராக ஆசைப்படுவதாகவும் அனைத்து வகையான புத்தகங்களையும் எழுதப்போவதாகவும் சிறுவன் கூறியுள்ளான்.