2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற 119 சட்டப்பேரவை தேர்தலில் 88 தொகுதிகளில் வெற்றி பெற்றது தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி. காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளில் வெற்றிபெற்று எதிர்க்கட்சி எனும் அந்தஸ்தை பெற்றது.
அதனைத் தொடர்ந்து தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி, நல்கொண்டா தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களவை உறுப்பினராகியுள்ளார். அதனால் அவர் வகித்த எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காங்கிரஸ் கட்சியில் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 18ஆக குறைந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் உள்ள 12 எம்.எல்.ஏ.க்கள் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இணையவுள்ளதாக சபாநாயகரிடம் கடிதம் வழங்கியுள்ளனர். இவர்களது இக்கடிதத்தை சபாநாயகர் ஏற்றுகொண்டால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி எனும் அந்தஸ்து பறிபோகும். ஏனெனில், கடிதம் கொடுத்தவர்களை தவிர காங்கிரஸ் கட்சியில் 6 எம்எல்ஏக்களே இருப்பர்.