டெல்லியை சேர்ந்த ஆப்கானிஸ்தான் சீக்கியர் நீடன் சிங் மேலும் 10 பேர் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர். இந்த 11 பேரும் இன்று (ஜூலை 26) இந்தியா வரவுள்ளனர். இவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சுற்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காபூலின் ஷோர் பஜாரில் குருத்வாரா குரு ஹர் ராய் பயங்கரவாத தாக்குதலில் 2020 மார்ச் மாதத்தில் 25 க்கும் மேற்பட்ட ஆப்கானிய சீக்கியர்களும் ஒரு இந்திய சீக்கியரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயுதமேந்திய தலிபான் ஆள்களால் பலர் கடத்தப்பட்டு குருத்வாராவில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தற்போது 11 ஆப்கானிய சீக்கியர்கள் அடங்கிய குழு இன்று (ஜூலை 26) டெல்லிக்கு வந்தடைகிறது. இந்த குழுவில் காபூலில் கடத்தப்பட்டதாக கூறப்படும் நிதான் சிங் சச்தேவாவும் ஆப்கானிய பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.
சச்தேவாவின் சகோதரர் சரண் சிங் சச்தேவா பேசுகையில், "இந்து-சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த 11 பேர் இன்று (ஜூலை 26) இந்தியாவை அடைவார்கள், இந்த குழுவில் எனது சகோதரர் நிதானும் திரும்பி வருவார். காபூல் குருத்வாரா தாக்குதலில் 14 வயது சிறுமி தந்தையை இழந்துவிட்டார். அதேசமயம் அவர் கடத்தப்பட்டு தற்போது மீட்கப்பட்டுள்ளார். இந்திய அரசின் வழிகாட்டுதலின் படி, திரும்பி வருபவர்கள் அனைவரும் 14 நாள்ட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள்.
டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழுத் தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா கூறுகையில், "ஆப்கானிஸ்தான் இந்து-சீக்கியர்களின் குழு டெல்லி குருத்வாராவில் தனிமைப்படுத்தப்படும். துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு உதவியதற்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய அரசு அவர்களின் குடியுரிமை கோரிக்கையை ஆராயும், மேலும் இந்து-சீக்கிய சமூக உறுப்பினர்கள் வரவிருக்கும் நாட்களில் இந்தியாவுக்கு திரும்புவதற்கு வசதி செய்யப்படுவார்கள்” என்றார்.