மார்ச் மாதம் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை டெல்லியில் சமய மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள நேபாள், ஃபிலிப்பைன்ஸ், இலங்கை, வங்கதேசம், இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து பலரும் வந்தனர்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பெரும்பான்மையினருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சில மாநிலங்களில் கரோனா வைரஸை பரப்பியதற்காக காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், சமய மாநாட்டில் கலந்துகொண்ட 107 வெளிநாட்டினர் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், ''புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விஷயத்தில் சம்மந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பேசி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டெல்லி சமய மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 107 பேர் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு படி அவர்களது சிறைவாசம் முடிந்த பின், அனைவரும் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவர் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர்களிடம் அமித்ஷா உரையாடல்!