தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கோந்தாபூர் சந்திர ராஜேஸ்வர ராவ் அறக்கட்டளையைச் சேர்ந்த 103 வயதுடைய முதியவர் பருச்சுரி ராமசாமி. இவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.
இந்நிலையில் தற்போது அரசு மருத்துவர்களின் சிகிச்சையாலும், சுகாதாரப் பணியாளர்களின் கவனிப்பாலும் கரோனாவிலிருந்து மீண்டுவந்துள்ளார்.
இதனையடுத்து முதியவர் பருச்சுரி ராமசாமி மருத்துவர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தெலங்கானா சுகாதாரத் துறை அமைச்சர் எட்டெலா ராஜேந்திரனுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பல மூத்த குடிமக்கள் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுவருவது நம்பிக்கை அளிக்கிறது.
இதையும் படிங்க...70 அடி பாஜக கொடிக்கம்பம் இரவோடு இரவாக இடித்து அகற்றம்!