டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பணிபுரிந்த தூய்மைப் பணியாளருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவருக்கு பிஎல் கபூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக இப்பெண்ணின் தாயார் கரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தார். அவர் மூலம் இப்பெண்ணிற்கு கரோனா தொற்று பரவியுள்ளது. இதையடுத்து அவருடன் பணிபுரிந்த ஊழியர்களை மருத்துவர்கள் சோதனை செய்ததில், வேறு யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அங்கு பணிபுரியும் அலுவலர்களை குடும்பத்தினருடன் வீட்டில் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கும்படி சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
தூய்மைப் பணியாளரின் தாயார் இறப்பிற்குப் பிறகு அவரது உறவினர்களில் 25 குடும்பங்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால், தற்போது 100 குடும்பங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும்படி சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: புனேவில் 25 மருத்துவ பணியாளர்களுக்கு கரோனா!