ETV Bharat / bharat

தொடர்ந்து ஒலிக்கட்டும் உரிமைக் குரல்... ஈழ தமிழர்களுக்கு வீர வணக்கம் - ராஜபக்‌ஷே

சிங்கள அரசிடம் முப்பது ஆண்டுக் காலம் உரிமைக்காகப் போராடிய லட்சக்கணக்கான தமிழர்களை, கொத்துக் கொத்தாக கொன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் புதைத்த நாள் இன்று. தமிழ் ஈழத்திற்காக விதைக்கப்பட்டு, இன்றுடன் பத்து ஆண்டுகள் நிறைவுபெறுகிறது.

பிரபாகரன்
author img

By

Published : May 18, 2019, 2:47 PM IST

Updated : May 18, 2019, 3:10 PM IST

'என்னுடைய உடலை மண்ணில் புதைப்பாய் சரி... ஆனால் என் மண்ணை எங்கு கொண்டு புதைப்பாய்.." என்ற அந்த அப்பாவி தமிழர்களின் அவலக் குரல் இன்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அந்த மக்களின் மரண ஓலங்கள் இன்றும் உலக அரங்கில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

'தமிழ் ஈழம்' என்ற பெயரில் தனிநாடு அமைக்கக்கோரி போராடிய விடுதலைப்புலிகள் உட்பட அப்பாவித் தமிழர்களை இலங்கை அரசு ஆயுதங்களைக் கொண்டு ஒடுக்கியது. ஒரு இனத்தை முழுவதுமாய் சிதைத்து மண்ணுக்குள் புதைத்தது. ஆனால் அதை இந்த உலகம் கைக்கட்டி வேடிக்கை மட்டுமே பார்த்ததுதான் கொடுமைகளின் உச்சம். உலக வரலாற்றில் கருப்பு பக்கங்களால் எழுதப்பட்ட இந்த முள்ளிவாய்க்கால் சம்பவத்தை, இன அழிப்பு நாளாக இலங்கை வடக்கு மாகாண சபை பிரகடனம் செய்தது.

ஆயுதங்களைக் கைகளில் எடுக்காமல், அமைதியான முறையில் 'தமிழ் ஈழம்' என்ற முழக்கத்தை முன் வைத்திருந்தால் இத்தனை உயிர் இழப்புகள் ஏற்பட்டிருக்காதே என்ற கேள்வியை, ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த விடுதலைப்புலிகள் முன்பு உலகம் வைக்கிறது.

SL genocide, elam
தாயை இழந்து கண்ணீரோடு நிற்கும் குழந்தை

ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டுவது அகிம்சை என்று இந்த உலகம் கூறுகிறது. அதற்கு மாற்றுக் கருத்து கிடையாதுதான். விடுதலைப்புலிகளும் ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்ட தயாராகத்தான் இருந்தார்கள். ஆனால் ஒரே தட்டில் உணவுண்டு, கவலைகளை சரி பாதியாக பகிர்ந்து கொண்டு, உயிரோடு உயிராக கலந்த நண்பனின் மீது கைவைக்கத் துணிகிறான். தொப்புள் கொடி உறவாகிய தமிழ் மக்களை துப்பாக்கியின் முனையில் நிறுத்துகிறான். இதைப்பார்த்த பின்பு அமைத்தி காத்தால் அதற்கு பெயர் அகிம்சை அல்ல.. கோழைத்தனம். அதனால், தங்களை தற்காத்துக் கொள்ளவும், உரிமைகளை போராடி பெறவே ஆயுதங்களைக் கைகளில் ஏந்தினர். உடமைகள் இழக்கப்படும் என்று தெரிந்தும், உரிமைக்காக உடமைகளை இழக்கத் துணிந்தனர்.

இந்த முடிவால் குண்டு மழையும்... குருதி வெள்ளமும்... அவலக் குரலும் முள்ளிவாய்க்காலில் கேட்கத்தான் செய்தது. சடலங்களுக்கு நடுவே பசியெடுத்து பாலுக்காக பச்சிளம் குழந்தைகள் தங்கள் தாய்களைத் தேடி அலைந்தன. வெற்று உடலோடு கிடந்த மகளை கட்டியணைத்து கண் துறந்து எழுந்து விடமாட்டாயா என தாயின் அழுகுரலால் வானத்தை நடுங்க வைக்கத்தான் செய்தது. போரில் கந்தகக் குண்டுகள் அப்பாவி தமிழர்களின் வாழ்வைக் கரித் துகள்களாக்கின. பஞ்சம் பசிக்கு நடுவே கை, கால்களை இழந்து, முள்ளிவாய்கால் முள்ளாய் மக்கள் தொண்டையில் சிக்குற்று சிதைக்கத்தான் செய்தது.

SL genocide, elam
உடைமைகளை இழந்து தவிக்கும் மக்கள்

ஆனால் பிராபகரன் தவறான முடிவை எடுத்துவிட்டார். விவேகம் அற்ற வீரம் அர்த்தமற்றது என்பதை நிரூபித்து விட்டார் என்று இந்த உலகம் கை உயர்த்தினாலும் கூட, அந்த போர்க்களத்திற்கு நடுவே நின்ற ஒவ்வொரு வீரனும், மரணத்தின் கடைசி நொடிவரை தங்களது முடிவை எண்ணி கவலையோ சந்தேகமோ கொள்ளவில்லை. அதற்கு மாறாக கர்வம் கொண்டான். தன்னுடைய மண்ணில்தான் மரணிக்கிறோம் என்ற ஆனந்தத்தில் உயிர் துறக்கத் துணிந்தான். அவர்களின் போராட்டத்தை வரலாற்றின் பக்கங்களில் இருந்து மறைத்துவிட முடியாது. காலத்தில் இருந்து அழித்துவிடவும் முடியாது.

போர்க்களத்தில் வெற்றி பெற்றிருந்தால் அந்த வீரர்களின் வரலாறு சரித்திரத்தில் பேனாவின் முனைகளால் மட்டுமே எழுதப்படிருக்கும். இப்போதும்கூட அவர்களின் வரலாறு எழுதப்படத்தான் செய்கிறது. விடுதலைப் புலிகள் புனிதர்கள் என்றோ அவர்கள் மீது தவறே இல்லையென்றோ இவ்வுலகில் யாராலும் வாதாட முடியாதுதான் அவர்களும் தவறு இழைத்திருக்கிறார்கள். கடவுளே இங்கு தவறு செய்யும்போது அவர்கள் மட்டும் செய்யக்கூடாதா என்ன? ஆனால் விடுதலைப்புலிகள் கடவுள்களாக சித்தரிக்கும் மனிதர்களும் இங்கு இருக்கிறார்கள். என்ன ஒன்று புலிகள் வேடிக்கை பார்த்த கடவுள்கள் இல்லை என்பதுதான் இங்கு பலருக்கு பிரச்னையாக இருக்கிறது.

SL genocide, elam
தாய்மார்களின் அலுகுரல்

ஒரு இனம் துன்பப்படும்போது பார்த்து ‘உச்’ கொட்டி பரிதாப்பட்டு கடந்து செல்லலாம். அது நமக்கு எளிது. ஆனால் இனத்துக்காக போராடியவர்கள் மீது குற்றம்சுமத்துவது கொடிது. புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்தினார்கள் என்ற கூற்றே இங்கு தவறாக பல காலமாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. ஈழத்தை நுண்ணிய பார்வையில் பார்த்தவர்களிடம் கேட்டால், அவர்கள் கூறுவது ஒன்றுதான் “மக்களும், புலிகளும் வேறு வேறு அல்ல. அங்கு மக்கள்தான் புலிகள், புலிகள்தான் மக்கள்”.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போது புலிகள் சில தவறான முடிவுகளை எடுத்தனர் அதனால் மக்கள் அநியாயமாக பலியானர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒரு போராளி அமைப்புக்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் அசுர கரங்களை கோர்த்துக்கொண்டதால் அவர்களின் பாதை மாறியது, சிந்தனை தடுமாறியது. தவறு பிறந்தது என்பதையும் நாம் இங்கு ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

புலிகள் மீது தவறோ, சிங்கள பேரினவாத அரசு மீது தவறோ, இல்லை மற்ற வல்லாதிக்க அரசுகள் மீது தவறோ யார் மீது வேண்டுமானாலும் தவறுகள் இருக்கலாம். ஆனால் மக்கள்தானே கொத்து கொத்தாக புதைந்து போனார்கள். சமீபத்தில்கூட இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. அப்போது சிங்களர்கள்கூட நினைத்திருக்கக்கூடும் புலிகள் இருந்தபோதுகூட இப்படி ஒரு கொடூரத்தை அவர்கள் அரங்கேற்றியது இல்லை என. இங்குதான் புலிகளின் அறத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

மக்கள் என்பவர்கள் யாருக்கும் இங்கு கேடயம் கிடையாது. அது போர் களத்தில் துப்பாக்கி சுமப்பவர்களுக்கும் சரி, இங்கு மேடையில் இறந்த மக்களை வைத்து அரசியல் செய்பவர்களுக்கும் சரி. புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்தினார்கள் என்றால் கடந்த பத்து வருடங்களில் சிலர் இங்கு அவர்களை கேடயமாக வைத்து மேடையில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்களே அவர்களை யார் குறை சொல்வது.

இங்கிருப்பவர்கள் அரசியல் செய்வதற்காக ஈழ மக்கள் இறக்கவில்லை. சுதந்திரம் மற்றும் உரிமைக்காக உயிர் நீத்தனர். நமது கடமை வருடா வருடம் அவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி, பரிதாபப்பட்டு, கட்டுரை, கவிதை எழுதுவது மட்டுமில்லை. வருடத்திற்கு ஒரு முறை அவர்களுக்கு நினைவு நாள் அனுசரிக்க அவர்கள் பக்கத்து நாட்டுக்காரர்கள் இல்லை. நமது சரி பாதிகள். சரீரத்தை தொலைத்து போனாலும், அவர்களின் நீங்கா கனவை நம்மிடம் விட்டு சென்றிருக்கிறார்கள். அதை நிறைவேற்றுவதே அவர்களுக்கு நாம் செய்யும் இறுதி அஞ்சலியும், வீர வணக்கமும்.

'இரத்தத்தின் கறைகளாலும், கண்ணீர் துளிகளின் பிசு பிசுப்பாலும்' முள்ளி வாய்க்காலை விட்டு இன்னும் பிரியாத அந்த மக்களுக்கு ஈடிவி பாரத் வீர வணக்கமும், அஞ்சலியும் செலுத்துகிறது.

Intro:Body:

10 years passed of SL genocide 

Conclusion:
Last Updated : May 18, 2019, 3:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.