ETV Bharat / bharat

கரோனா அச்சம்: கிர்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 10 பேருக்கு தடுப்புக் காவல்! - பிகார் மாநிலத்தில் கரோனா பரவல்

பாட்னா: கரோன அச்சம் காரணமாக கிர்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 10 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ சோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Corona  state lockdown  coronavirus  Kyrgyzstan nationals  AIIMS  Bihar police  Patna incident  கரோனா அச்சம், பிகாரில் கிர்கிஸ்தான் நாட்டினர் கைது  பிகாரில் இஸ்லாமிய மதபோதகர்கள் கைது  பிகார் மாநிலத்தில் கரோனா பரவல்  coronavirus threat

author img

By

Published : Mar 23, 2020, 9:23 PM IST

பிகார் மாநில தலைநகர் பாட்னா அருகேயுள்ள குர்ஜி பகுதியில் சந்தேகத்திற்குரிய ஆள்கள் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் காவலர்களுக்கு புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கிர்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய மத போதகர்கள் என்பது தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் உரிய பயண ஆவணங்கள் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவலர்கள் அவர்களை விடுவித்தனர். எனினும் அவர்களின் ரத்த மாதிரிகள் கரோனா பரிசோதனை ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டு, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து காவலர் கூறுகையில், “கிர்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 10 பேர் மட்டுமின்றி இந்திய சுற்றுலா வழிகாட்டிகள் இருவரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை. இதையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

எனினும் அவர்கள் தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.

கரோனா வைரஸ் தொற்று தாக்குதலுக்கு பிகார் மாநிலத்தில் முதல் மரணம் மார்ச் 22ஆம் தேதி நடந்தது.

உலகம் முழுக்க கரோனா வைரஸ் கிருமி தொற்று 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கி உள்ளது. இந்தியாவில் இத்தொற்று நோய்க்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா தாக்கம்: கைதிகளைப் பிணையில் விடுவிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.