ETV Bharat / bharat

பஞ்சாப்பில் முதல்கட்டமாக ஒன்றரை லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி - அமைச்சர் பால்பீர் சிங்

பஞ்சாப் மாநிலத்தில் முதல்கட்டமாக ஒரு லட்சத்து 60 ஆயிரம் மருத்துவப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அம்மாநில அமைச்சர் பால்பீர் சிங் சிந்து தெரிவித்துள்ளார்.

Punjab Health Minister on COVID Punjab Health Minister on vaccine health workers will be first to get COVID-19 vaccine Punjab health workers

author img

By

Published : Jan 4, 2021, 3:10 PM IST

சண்டிகர்: இந்தியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கோவிஷீல்ட் தடுப்பூசி, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி ஆகியவற்றை அவசரகாலத்துக்கு பயன்படுத்த இந்திய தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. முதல்கட்டமாக நாடு முழுவதுமுள்ள 3 கோடி முன்கள பணியாளர்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு முன்னதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஒரு லட்சத்து 60 ஆயிரம் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு முதல்கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பால்பீர் சிங் சிந்து தெரிவித்துள்ளார். அவர்களது விவரங்கள் ஏற்கனவே கரோனா தடுப்பூசிக்காக உருவாக்கப்பட்ட 'கோவின்' எனும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து, காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட மூன்று லட்சம் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என அம்மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய பால்பீர் சிங், " நாளொன்றுக்கு நான்கு லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான திறன் பஞ்சாப் அரசிடம் உள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்குவதற்கு அரசு ஆயுத்தமாக இருக்கிறது.

மாநிலம் முழுவதும் நன்கு பயிற்சிப்பெற்ற நான்காயிரம் தடுப்பூசி செலுத்துவர்கள் உள்ளனர். மிகப்பெரிய அளவில் மருத்துவர்கள், செவிலியர்கள், பல் மருத்துவர்கள், மருந்தகப் பணியாளர்கள் மூலம் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படும்" என்றார்.

தற்போது வரை அம்மாநிலத்தில் ஒரு லட்சத்து 67 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்து 364 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: 'விவசாயிகளின் கோபத்தை எந்த அரசாலும் எதிர்கொள்ள முடியாது' - ப.சிதம்பரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.