ETV Bharat / bharat

பாரத் ஜோடோ யாத்திரை அக்டோபர் 23ஆம் தேதி தெலங்கானாவில் தொடங்குகிறது - ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்த்திரை 23ஆம் தேதி தெலுங்கானாவில் தொடங்குகிறது.

தெலங்கானா வந்தடையவுள்ள ராகுலின் ‘பாரத் ஜோடோ யாத்ரா’...!

author img

By

Published : Oct 18, 2022, 1:13 PM IST

ஹைதராபாத்: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை வரும் அக்.23 ஆம் தேதி தெலங்கானாவில் தொடங்கும் என்றும் அன்றிலிருந்து நவம்பர் 7ஆம் தேதி வரை தெலங்கானாவின் பல்வேறு மாவட்டங்களில் தொடரும் என்றும் அம் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ நாங்கள் பாரத் ஜோடோ யாத்திரைக்கு தயாராகவுள்ளோம். தெலங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள யாத்திரை தகவல்களை வெளியிடுவதில் மகிழ்ச்சி. வரும் அக்.23ஆம் தேதி வரவுள்ள ராகுல் காந்தியை வரவேற்கிறோம்.

ராகுல் தெலங்கானாவில் நவம்பர் 7ஆம் தேதி வரை இருப்பார். நிச்சயம் இந்த நிகழ்வை தெலங்கான காங்கிரஸ் கட்சியினர் வரலாற்று சிறப்பு மிக்கதாக மாற்றுவார்கள் என்று நம்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். அக்.24, 25, 26 ஆகிய தேதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு யாத்திரை நடைபெறாது எனத் தெரிகிறது. தெலங்கானா மாநிலத்தில் மட்டும் ராகுலின் யாத்திரை 360 கிமீ வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வெள்ளத்தில் மூழ்கிய சோலார் பார்க்; யூனிட் பகுதியில் நீச்சல் அடித்த யூத்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.