ETV Bharat / bharat

ஒமைக்ரான் வைரஸை எதிர்கொள்ளுமா கோவாக்சின்? - Krishnanand Tripathi

ஒமைக்ரான் வைரஸை பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி எதிர்கொள்ளுமா என்பது குறித்து ஆய்வுகள் நடந்துவருகின்றன. இது குறித்து ஈடிவி பாரத்தின் கிருஷ்ணானந்த் திரிபாதி விவரிக்கிறார்.

Bharat Biotech
Bharat Biotech
author img

By

Published : Nov 30, 2021, 10:52 PM IST

டெல்லி : கடந்த வாரம் தென் ஆப்பிரிக்காவில் கோவிட்-19 வைரஸின் புதிய மற்றும் மிகவும் கொடிய பதிப்பான ஒமைக்ரான் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி ஒமைக்ரானுக்கு எதிராக செயல்படுமா என்பதை ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட தடுப்பூசி நிறுவனமான பாரத் பயோடெக் ஆய்வு செய்து வருகிறது.

உலக சுகாதார அமைப்பால் ஒமைக்ரான் (Omicron) எனப் பெயரிடப்பட்ட SarS-CoV-2 வைரஸ் அதிக பரவக்கூடிய தன்மை கொண்டதாகும். இதனால் உலக சகாதார அமைப்பு ஒமைக்ரான் மாறுபாடு குறித்து உலக நாடுகளுக்கு எச்சரிக்கை மணிகளை எழுப்பியுள்ளது.

பல நாடுகள் வெளிநாட்டினரின் நுழைவைக் கட்டுப்படுத்துகின்றன மற்றும் வைரஸைக் கண்டறிய கண்காணிப்பை அதிகரிக்கின்றன. ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சில ஆசிய நாடுகளைப் போல கோவிட்-19 உலகளாவிய தொற்றுநோய் பரவலால் ஆப்பிரிக்க நாடுகள் அதிகம் பாதிக்கப்படவில்லை.

இந்நிலையில் ஒமைக்ரான் பாதிப்பு அந்த நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. இந்த அச்சங்கள் குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.

பாரத் பயோடெக்கும் ஒமைக்ரான் குறித்து ஆராய்ச்சிகள் நடத்திவருகிறது. இது தொடர்பாக பாரத் பயோடெக் தனது அறிக்கையில், “வூகானில் கண்டறியப்பட்ட வைரஸிற்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி கண்டறியப்பட்டது.

இது கரோனா உள்பட உருமாறிய வைரஸிற்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுவருகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : புதுச்சேரியில் டிச.15 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.