புதுடெல்லி: கரோனாவிற்காக மூக்கு வழியாக செலுத்தப்படும், பாரத் பயோடெக்கின் உலகளவிலான கரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசிடமிருந்து அவசரகால பயன்பாட்டு அனுமதி கிடைத்துள்ளது.
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா,"கரோனாவிற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு பெரும் ஊக்கம் கிடைத்துள்ளது. பாரத் பயோடெக்கினால் உருவாக்கப்பட்ட கோவிட்-19 சிம்பன்சி அடினோவைரஸ் வெக்டார்டு மறுசீரமைப்பு நாசி தடுப்பு மருந்து,
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனாவுக்கு எதிரான முதன்மை நோய்த்தடுப்பு மருந்தாக அவசரகால சூழ்நிலையில் பயன்படுத்துவதற்காக, இந்திய அரசின் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாடு அமைப்பால் (CDSCO) அங்கீகரிக்கப்படுள்ளது”, எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தெருநாய் கடித்த சிறுமி ரேபிஸ் நோயால் உயிரிழப்பு