ETV Bharat / bharat

போலீசார் அதிரடி வேட்டை... நக்சல்கள் 10 பேர் கைது... பயங்கர வெடிபொருட்கள் பறிமுதல்! - நக்சல்கள் 10 பேர் கைது

தெலங்கானா - சத்தீஸ்கர் மாநில எல்லைப்பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், நக்சல்கள் 10 பேர் கைது செய்யப்பட்டனர். டெட்டனேட்டர்கள், கார்டெக்ஸ் வயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Naxals arrest
நக்சல்கள் கைது
author img

By

Published : May 23, 2023, 9:48 PM IST

ஜக்தல்புர்/பிஜாபூர்: சத்தீஸ்கர் மாநில எல்லையையொட்டி, தெலங்கானா மாநிலம் முலக்கனபள்ளி, துமுகுடேம் பகுதிகளில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து இரண்டு பகுதிகளையும் சிஆர்பிஎப் வீரர்கள், கொட்டாகுடெம் மற்றும் துமுகுடேம் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்பகுதி முழுவதும், கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

வெடிபொருட்களுடன் நின்ற டிராக்டர்: அப்போது போலீசாரை கண்டதும் சிலர் வனப்பகுதிக்குள் ஓட்டம் பிடித்தனர். அவர்களை துரத்திச் சென்ற போலீசார் சுற்றிவளைத்தனர். இதற்கிடையே அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த டிராக்டரை காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில், 90 பண்டல்கள் அடங்கிய கார்டெக்ஸ் வயர்கள், 500 டெட்டனேட்டர்கள் மற்றும் பயங்கர வெடிபொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அவற்றை பறிமுதல் செய்னர். கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வெடிபொருட்களை எங்கிருந்து நக்சல்கள் வாங்கினார்கள் என்ற விவரத்தை தெலங்கானா போலீசார் தெரிவிக்கவில்லை. அதை பற்றி ரகசியமாக விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

10 பேர் கைது: இச்சம்பவத்தில் தெலங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டத்தை சேர்ந்த சன்மய்யா, ஆரப்பள்ளி ஸ்ரீகாந்த், மேகல ராஜூ, ரமேஷ் கும், சாலப்பள்ளி, சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்டத்தை சேர்ந்த முச்சகி ரமேஷ், சுரேஷ், லாலு, சோதி மகேஷ், மவ்தி சைது ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், 10 பேரும் பல ஆண்டுகளாக நக்சல் அமைப்பில் இருப்பது அம்பலமாகியுள்ளது.

சதித்திட்டம் முறியடிப்பு: வெடி மருந்தை வாங்கக் கூறியது தங்கள் அமைப்பின் தலைவர்கள் தான் என கைதானவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரிய தாக்குதல் நடத்தவே வெடிபொருட்களை வாங்கியிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் பயங்கர வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், பெரிய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தெலங்கானா - சத்தீஸ்கர் மாநில எல்லைப்பகுதிகளில் இருமாநில போலீசாரும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அண்மையில் சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா அருகே உள்ள அரன்பூரில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில், பாதுகாப்பு படை வீரர்கள் 10 பேர் வீரமரணம் அடைந்தனர். சுரங்கப்பாதையில் 50 கிலோ வெடிமருந்தை மறைத்து வைத்து தாக்குதல் நடத்தியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், பயங்கர வெடிபொருட்களுடன் நக்சல்கள் 10 பேர் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பஞ்சாப் சர்வதேச எல்லையில் போதைப்பொருட்கள் நிரம்பிய பாகிஸ்தான் ட்ரோனை சுட்டுவீழ்த்திய BSF!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.