ETV Bharat / bharat

மறக்குமா நெஞ்சம்! - 2011 உலக கோப்பை குறித்து டோனி உதிர்த்த வார்த்தைகள்!

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதி போட்டியில் தனக்கு நேர்ந்த சிறந்த உணர்வுகள் குறித்து பேசினார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 3, 2023, 11:11 AM IST

சென்னை : இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கூல் கேப்டனுமான எம்.எஸ் டோனி, சென்னையில் நேற்று (ஏப். 2) நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். டோனியுடன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக் ஹஸ்ஸியும் கலந்து கொண்டார்.

தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளினியும், இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவின் மனைவியுமான சஞ்சனா கணேசனுடன், டோனி கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் பேசிய டோனி, 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் வெற்றி பெறுவதற்கு முந்தைய 15 முதல் 20 நிமிடங்கள் தன் வாழ்நாளில் சிறந்த தருணம் மற்றும் உணர்வு எனக் கூறினார்.

மேலும், போட்டி முடிவதற்கு 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன் நல்ல பார்ட்னர்ஷிப்புடன் அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாதது தனது சிறந்த தருணம் என டோனி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மைதானம் முழுவதும் குழுமியிருந்த ஆயிரக்கணக்கிலான ரசிகர்கள் வந்தே மாதரம் என பாடியது மறக்க முடியாதது என்றும், அதுபோன்ற ஒரு தருணத்தை மீண்டும் உருவாக்க முடியாது என்றும் கூறினார்.

அதேநேரம் இந்தியாவில் நடைபெற உள்ள 2023 உலக கோப்பை தொடரில் ரசிகர்கள் நினைத்தால் அது போன்ற ஒரு தருணத்தை உருவாக்க முடியும் என்றார். அதற்கு ஏற்றார் போல் மைதானமும், ரசிகர்களும் கூடினால் 2011 ஆம் ஆண்டு தான் சந்தித்த இனிய தருணத்தை மீண்டும் நிகழ்த்திக் காட்ட முடியும் என்று அவர் கூறினார்.

மைதானத்தில் திரளும் 40, 50 அல்லது 60 ஆயிரம் ரசிகர்கள் ஒன்றிணைந்து பாடும் போது 2011 ஆம் ஆண்டு நிகழ்ந்த தருணத்தை மீண்டும் கொண்டு வர முடியும் என கேப்டன் டோனி தெரிவித்தார். 15 முதல் 20 நிமிடங்களுக்கு பிறகு போட்டியில் வெற்றி பெற்ற தருணத்தில் தனக்குள் எந்த உயர்வும் ஏற்படவில்லை என்றும் வெற்றி பெற வேண்டும் என்ற எழுச்சி மட்டுமே இருந்ததாகவும் அவர் கூறினார்.

போட்டியில் எப்படியும் வெற்றி பெற்று விடுவோம் என அணியினர் அறிந்து இருந்ததாகவும், தோல்வி காண்பது எளிதானது அல்ல என வீரர்களுக்கு முன் கூட்டியும் தெரியும் என்ற எண்ணம் தனக்கு திருப்தி உணர்வை அளித்ததாக டோனி கூறினார். 2011 உலக கோப்பையை வெல்வதற்கான பாதையில் தான் எப்படி இறங்கினேன் என்பதையும் வெற்றியை எப்போது எளிமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நம்புவதாகவும் டோனி தெரிவித்தார்.

வெற்றியை நோக்கி ஓடும் போது இலக்கின் மீது மட்டுமே பார்வை இருக்க வேண்டும் என்றும், அப்போது தான் வெற்றியை அடைந்த பிறகு ஒருவர் அதை முழுமையாக உணர முடியும் என டோனி பேசினார். அணியில் இருந்த அனைவருக்கும் தெரியும், சச்சின் தெண்டுல்கருக்கு இது தான் கடை உலக கோப்பை என்பது.

எப்படியாவது கோப்பை வெல்ல வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு வீரரிடமும் இருந்ததாகவும், அதனால் நூற்றுக்கு நூறு சதவீதம் முயற்சிகளை ஆட்டத்தில் வெளிப்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் பலன்களை முழு மனதுடன் பெற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பினோம் என்றார். வீரர்கள், அணி நிர்வாகம், ஊழியர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்டோரின் முழு ஒத்துழைப்பும் திருப்திகரமாக இருந்ததாக டோனி தெரிவித்தார்.

வரலாற்று சிறப்புமிக்க உலக கோப்பையை வென்று 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அதை குறிக்கும் வகையிலான டிஜிட்டல் சேகரிப்புகளை ஐசிசி டிஜிட்டல் பிரிவு தலைவர் உள்ளிட்டோர் டோனிக்கு பரிசாக வழங்கினர்.

இதையும் படிங்க : வேலியே பயிரை மேய்ந்தது - இரு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ராணுவ வீரர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.