பெங்களூரு: நாட்டில் கரோனா, ஒமைக்ரான் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால் மத்திய அரசு தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. மாநில அரசுகளும் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிவருகின்றன.
மற்ற மாநிலங்களைவிட மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக பதிவு செய்யப்படுவதால், அண்டை மாநிலங்கள், எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றன.
இதனிடையே கர்நாடகா மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்று தொடர்ந்து அதிகரித்துவருகிறது. குறிப்பாக பெங்களூருவில் ஒமைக்ரான் தொற்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 287 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 766ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் மாநிலம் முழுவதும் 34,047 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சராசரியாக நாளொன்றுக்கு 19.29 விழுக்காடு அதிகரித்துவருகிறது.
இதையும் படிங்க: கர்நாடகாவில் விஸ்வரூபம் எடுக்கும் கரோனா