ETV Bharat / bharat

Denying sex: ஓராண்டாக தாம்பத்திய உறவை மறுத்த கணவர் மீது மனைவி போலீசில் புகார்! - கணவர் மீது மனைவி காவல்துறையில் புகார்

பெங்களூரில் திருமணமாகி ஓராண்டாக கணவர் தாம்பத்திய உறவை மறுத்து தன்னை கொடுமைப்படுத்தி வருவதாக இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Bengaluru
மனைவி
author img

By

Published : Jun 9, 2023, 4:30 PM IST

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த நபருக்கும் ஒராண்டுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இருவருக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும் பெங்களூரில் வசித்து வந்தனர்.

திருமணத்திற்குப் பிறகு இருவருக்கும் இடையே அன்பும், புரிதலும் பெரிதளவில் இல்லை என கூறப்படுகிறது. இதனால் இவர்களது இல்லற வாழ்வு கசப்பாக மாறியது. இளம்பெண் தன் கணவரிடம் நெருங்கிச் செல்ல நினைத்தும், அவர் எந்தவித ஆர்வமும் காண்பிக்கவில்லை என தெரிகிறது. கணவர் சுமார் ஒரு வருடமாக தாம்பத்திய உறவை மறுத்து வந்ததால், பொறுமை இழந்த இளம்பெண் பரஸ்பர விவகாரத்து செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். ஆனால், அதற்கும் அந்த கணவர் உடன்படவில்லை என தெரிகிறது.

இதனால், இளம்பெண் இது தொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ரஹார காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "எனது திருமண வாழ்க்கை சீரழிந்துவிட்டது. எனக்கும் எனது கணவருக்கும் இடையே புரிதல் இல்லை. இது தொடர்பாக நான் பலமுறை அவரிடம் பேசினேன். ஆனாலும் இல்லற வாழ்வு குறித்து கவலை கொள்ளாமல், அற்ப விஷயங்களுக்காகவே கோபப்படுவார். அவர் என் மீது செலுத்தும் அன்பும் மேலோட்டமானதாகவே தோன்றுகிறது.

இதையும் படிங்க: Divorce photoshoot: கணவருடன் விவாகரத்து பெற்றதை கொண்டாடி போட்டோஷுட் எடுத்த தமிழ் சீரியல் நடிகை!

ஒரு வருமாக தாம்பத்திய வாழ்வை மறுத்து என்னை கொடுமைப்படுத்தினார். எனது திருமண வாழ்க்கை குறித்த கனவுகளை என் கணவர் ஏற்கனவே சிதைத்துவிட்டார். அவர் மிகவும் குறுகிய மனப்பான்மை கொண்டவராக இருக்கிறார். அதனால், பரஸ்பரம் விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று கூறி நான் ஆவணங்களைக் கொடுத்தபோதும், அதில் கையெழுத்து போட மறுத்துவிட்டார். என்னைக் கொடுமைப்படுத்தி வரும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

விவாகரத்து வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடு, தாம்பத்திய உறவை மறுப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில் தாம்பத்திய உறவை மறுப்பது மனக் கொடுமை என அலகாபாத் உயர்நீதிமன்றம் அண்மையில் கூறியிருந்தது. கடந்த மாதம் விவாகரத்து வழக்கு ஒன்றை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், எந்தவித காரணமும் இன்றி வாழ்க்கைத் துணையுடன் நீண்ட காலமாக உடலுறவை மறுப்பது, அவர்களை மன ரீதியாக துன்புறுத்துவதற்கு சமம் என்று கூறியிருந்தது.

இதையும் படிங்க: "காரணம் இல்லாமல் துணையோடு உடலுறவை மறுப்பது மன ரீதியாக கொடுமைப்படுத்துவதாகும்" - அலகாபாத் உயர்நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.