பெங்களூர்: கர்நாடக மாநிலம், பெங்களூருவில் மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இன்று(ஜன.12) பெங்களூருவில் அசோக் நகர் பகுதியில் உள்ள ஜான்சன் மார்க்கெட் சாலையில் நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையின் நடுவே திடீரென இரண்டு அடிக்கு பள்ளம் ஏற்பட்டது. இதை சிறிதும் எதிர்பாராத அந்த வாகன ஓட்டி பள்ளத்தில் விழுந்தார். இந்த சம்பவத்தைக் கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பள்ளத்தில் விழுந்து காயமடைந்த வாகன ஓட்டியை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்ற வாகனங்களை மாற்று வழியில் அனுப்பினர். பின்னர் பள்ளம் ஏற்பட்டதை ஆய்வு செய்தனர். சாலைக்கு அருகே மெட்ரோ சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், அதன் தாக்கத்தால் சாலையில் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த 10ஆம் தேதி பெங்களூருவில் பிரைகேட் சாலையில், மெட்ரோ பில்லர் இடிந்து விழுந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதில் தேஜஸ்வினி என்ற பெண்ணும் அவரது இரண்டரை வயது மகனும் உயிரிழந்தனர். தேஜஸ்வினியின் கணவரும், மகளும் படுகாயமடைந்தனர்.
இதையும் படிங்க: Haryana gas Blast: கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 6 பேர் பலி!