மேற்குவங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராமில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. திருணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி அவரை எதிர்த்துக் களம் காண்கிறார்.
![முக்கிய வேட்பாளர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11222063_key-candidate.jpg)
நான்கு மாவட்டங்களில் உள்ள 30 தொகுதிகளுக்கு 8,332 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டுவருகிறது. தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் என மொத்தம் ஒன்பது கட்சிகளைச் சேர்ந்த 171 வேட்பாளர்கள் இன்று களத்தில் உள்ளனர்.
![வேட்பாளர்கள் விவரம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11222063_top-criminal-candidate.jpg)
அதிகபட்சமாக பங்குரா தொகுதியில் 11 வேட்பாளர்களும் கேஷ்பூர், இந்துஸ் ஆகிய தொகுதிகளில் மூன்று வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
![கட்சிகளின் விவரம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11222063_wb-woman-candidate.jpg)
ஆறு தொகுதிகள் மூன்று அல்லது அதற்கு மேலாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எதிராகக் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவை பதற்றமானதாகக் கண்டறிப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 19 பெண் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
![வேட்பாளர்களின் விவரம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11222063_about-criminal-candidate.jpg)
களத்தில் உள்ள 171 பேரில், 43 பேருக்கு எதிராகக் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேபோல், 36 பேருக்கு எதிராகத் தீவிர குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
![கட்சி விவரம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11222063_criminal-candidate.jpg)