ETV Bharat / bharat

"ராமநவமி வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" - மேற்கு வங்க ஆளுநர்! - ராமநவமி வன்முறைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை

ராமநவமி வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் தெரிவித்துள்ளார். வன்முறை நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட அவர், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளிக்க உள்ளார்.

Bengal
Bengal
author img

By

Published : Apr 4, 2023, 8:43 PM IST

ஹூக்ளி: மேற்குவங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தில் ஹவுரா நகரில் கடந்த 30ஆம் தேதி நடந்த ராமநவமி ஊர்வலத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டது. கலவரத்தில் பலர் படுகாயமடைந்தனர். இந்த வன்முறைக்கு பாஜகதான் காரணம் என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

இதன் தாக்கம் குறைவதற்குள், கடந்த 2ஆம் தேதி ஹூக்ளியில் பாஜக சார்பில் ராமநவமி ஊர்வலம் நடத்தப்பட்டது. பாஜக தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ் தலைமையில் நடந்த இந்த ஊர்வலத்திலும் வன்முறை வெடித்தது. கற்களை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கலவரத்தில் மேற்கு வங்க பாஜக எம்எல்ஏ பிமன் கோஷ் காயமடைந்தார். மசூதியைத் தாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வதந்தி பரவியதால் இந்த கலவரம் ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அசம்பாவிதங்களை தடுக்க இணைய சேவை தடை செய்யப்பட்டு, மக்கள் கூடவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து நேற்று(ஏப்.3) ஒரு இடத்தில் வெடிகுண்டு சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

மேற்குவங்க அரசால் சட்டம் ஒழுங்கை காக்க முடியவில்லை என பாஜகவினர் குற்றம்சாட்டினர். ஆனால், இந்த வன்முறை சம்பவத்திற்கு பாஜகவினர்தான் காரணம் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். பாஜகவினர் திட்டமிட்டு இந்த வன்முறையை நிகழ்த்தியிருப்பதாக குற்றம்சாட்டிய மம்தா, ராமநவமி முடிந்த பிறகு மீண்டும் ஊர்வலம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்றும் கேள்வி எழுப்பினார். இந்தச் சம்பவம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸும், பாஜகவும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டனர்.

இந்த நிலையில், மேற்கு வங்காள ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் இன்று, ஹூக்ளி மாவட்டத்தில் வன்முறை நடந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வன்முறையாளர்கள் சட்டத்தை கையிலெடுப்பதை அனுமதிக்க முடியாது என்றும், இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஹூக்ளியில் மீண்டும் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். மேற்குவங்கத்தில் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருவதாகவும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டி உள்ளது என்றும் தெரிவித்தார். இந்த ராமநவமி வன்முறைச் சம்பவம் தொடர்பாக, மேற்கு வங்காள ஆளுநர் ஆனந்த போஸ் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளிக்க உள்ளார்.

இதையும் படிங்க: கேரள பழங்குடி இளைஞர் அடித்துக் கொலை வழக்கு - 14 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.