தொற்றுநோயின் இரண்டாவது அலை காரணமாக அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு, அரசியல் பழிவாங்கும் போக்கு, முதலமைச்சர் மம்தா பானர்ஜி உட்பட பல முக்கிய தலைவர்களுக்கு பரப்புரை செய்ய இந்திய தேர்தல் ஆணையம் தடை , சிதல்குச்சியில் ஆயுதப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறின.
மம்தா பானர்ஜியைத் தவிர, பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ் மற்றும் பாஜகவின் மூத்த தலைவர் ராகுல் சின்ஹா ஆகியோரும் தேர்தல் ஆணையத்தால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பரப்புரை செய்வதற்கு தடை செய்யப்பட்டனர். இது தவிர, சயந்தன் பாசு மற்றும் சுவேந்து அதிகாரி போன்ற பாஜக தலைவர்களுக்கும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்தது.
தேர்தல் ஆணையம் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே வளர்ந்து வரும் பதட்டமான சூழலில் புதிய தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவின் கீழ் ஐந்தாவது கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
அதிகரித்து வரும் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, கடைசி மூன்று கட்ட தேர்தலை ஒரே கட்டமாக நடத்த மம்தா கோரினார். ஆனால் மத்திய ஆயுதப் படைகளை பணியமர்த்துவதில் பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்களை ஏற்படுத்தும் என்பன உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி, மம்தாவின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து. இந்நிலையில், புதிய தேர்தல் ஆணையர் தலைமையின் கீழ் 5ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
இதனிடையே், ஜாங்கிபூர் சட்டமன்றத் தொகுதியின் ஆர்.எஸ்.பி வேட்பாளர் பிரதீப் நந்தி கரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவர், கொரோனா வைரஸ் காரணமாக இறந்த இரண்டாவது வேட்பாளர் ஆவார்.
சிதல்குச்சியில் துப்பாக்கிச் சூடு தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில், ஐந்தாவது கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மம்தா பானர்ஜிக்கும், சிதால்குச்சியைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பார்த்தா பிரதிம் ராய்க்கும் இடையிலான உரையாடலின் ஆடியோ டேப்பை பாஜக வெளியிட்டுள்ளது. சிதால்குச்சி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மத்திய ஆயுதப்படை வீரர்களை கம்பிகளுக்குப் பின்னால் வைப்பதாக மம்தா பானர்ஜி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அதே உரையாடலில், கூச் பெஹார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு எதிராக மம்தா பானர்ஜி கடுமையான குற்றசாட்டுகளை கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவை போலியானவை என கூறி திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது.
மம்தா பானர்ஜி இறந்த உடல்களுடன் அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. . சிதால்குச்சி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்த மேற்கு வங்காள காவல்துறையின் குற்ற புலனாய்வுத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையை முடித்து, மே 5க்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கவும் கொல்கத்தா உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் அறிவுறுத்தியுள்ளது.
ஐந்தாவது கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில், வன்முறைகள் குறித்த பரவலான அச்சம் நிலவுகிறது. கூடுதல் படைகள் பயன்படுத்தப்பட்டாலும் உரையாடலின் கடைசி நிமிட கசிவு ஏற்கனவே உள்ள பதற்றமான சூழ்நிலையை மேலும் அதிகரிக்கும். அனைவரின் கவனமும் தேர்தல் நடைபெறவுள்ள 45 தொகுதிகளின் மேல் தான் உள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் கரோனா தொற்றை துஷ்பிரயோகம் செய்யும் கைதிகள்!