ETV Bharat / bharat

"தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் படத்தால் நிம்மதி இழந்தோம்" - பொம்மன், பெள்ளி குற்றச்சாட்டு! - பொம்மன் பெள்ளி

ஆஸ்கர் வென்ற தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் படத்தில் தங்களுக்கான தொகையை இயக்குநர் வழங்கவில்லை என பொம்மன் - பெள்ளி தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

Kartiki Gonsalves
Kartiki Gonsalves
author img

By

Published : Aug 6, 2023, 11:08 PM IST

Updated : Aug 7, 2023, 11:30 AM IST

ஐதராபாத் : ஆஸ்கர் வென்ற தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் படத்தில் தங்களுக்கான தொகையை இயக்குநர் வழங்கவில்லை என பொம்மன் - பெள்ளி தம்பதியினர் தெரிவித்து உள்ளனர். முதுமலையில் உள்ள யானை பாகன்களின் வாழ்க்கை யதார்த்தங்களை திரைக்கதையாக கொண்டு உருவாக்கப்பட்ட தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப் படம் ஆஸ்கர் விருது பெற்றது.

இந்நிலையில், அந்த ஆவணப் படத்தில் நடித்த பெள்ளி மற்றும் பொம்மன் ஆகியோர் படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளனர். ஆவணப் படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் தங்களுடன் மிகவும் நெருக்கமாக பழகியதாகவும், ஆனால் ஆஸ்கார் விருது வென்ற பிறகு முற்றிலும் மாறிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

தங்களது தொலைபேசி அழைப்புகளை இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் எடுக்கவில்லை என்றும், இதுவரை தங்களுக்கு பணம் வழங்கப்படவில்லை என்றும் பொம்மன் - பெள்ளி தெரிவித்து உள்ளனர். மேலும் படப்பிடிப்பின் போது இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் தங்களிடம் வந்து திருமண காட்சியை படமாக்க விரும்புவதாகவும் பணம் இல்லாததால் நீங்கள் செலவு செய்யும்படி கூறியதாக இருவரும் தெரிவித்து உள்ளனர்.

பேத்தியின் படிப்புக்காக பெள்ளி சேமித்து வைத்திருந்த பணத்தை நாங்களே எடுத்து கொடுத்தோம் என்றும் திருமண நிகழ்ச்சிக்கு சுமார் 1 லட்ச ரூபாய் செலவழித்து உள்ளோம் என்றும் இருவரும் தெரிவித்து உள்ளனர். மேலும் அந்த தொகையை அவர் திருப்பி தருவதாக கூறியதாகவும் ஆனால் திருப்பி தரவில்லை என்றும் இருவரும் கூறி உள்ளனர்.

தாங்கள் செல்போன் மூலம் அழைத்தபோது அவர் பிஸியாக இருப்பதாகவும் பின்னர் அழைப்பதாகக் கூறி அழைப்பைத் துண்டித்துவிட்டதாகவும் இருவரும் தெரிவித்து உள்ளனர். எங்களால் தான் அவர் ஆஸ்கார் விருதை வென்றார் என்றும் அந்த ஆவணப்படத்திற்குப் பிறகு நாங்கள் நிம்மதி இழந்துவிட்டோம் என பொம்மன் மற்றும் பொம்மன் கூறி உள்ளனர்.

அதேநேரம் தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்பட தயாரிப்பு நிறுவனம் தம்பதியினரின் குற்றச்சாட்டை மறுத்து உள்ளது. இருவரும் பொய் கூறுவதாகவும் வனத்துறை மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்புக்காக அவர்கள் செய்து வரும் பணிகளை பாராட்டவே இந்த திட்டத்தை துவக்கியதாகவும் தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க : மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் அரசுக்கு வழங்கிய ஆதரவு வாபஸ்.. குக்கி மக்கள் கூட்டணி ஆளுநரிடம் கடிதம்!

Last Updated : Aug 7, 2023, 11:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.