ETV Bharat / bharat

Exclusive: இனி கார் பேட்டரியை ரீசார்ஜ் செய்யத் தேவையில்லை.. ஐஓசி அதிகாரி கூறியது என்ன? - அலுமினியம் பேட்டரி

லித்தியம் பேட்டரிகளுக்கு மாற்றாக இந்தியன் ஆயில் நிறுவனம் தயாரித்து வரும் அலுமினியம் பேட்டரிகள் வாகன ஓட்டிகளுக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும் என ஐஓசியின் ஆராய்ச்சித்துறை இயக்குநர் ராமகுமார் தெரிவித்துள்ளார். இந்த பேட்டரிகள் 2024ஆம் ஆண்டு இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.

Battery
Battery
author img

By

Published : Jan 24, 2023, 5:08 PM IST

Updated : Jan 24, 2023, 6:02 PM IST

ஹைதராபாத்: உலகளவில் ஆட்டோமொபைல் துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. கார்பன் உமிழ்வை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளன. அடுத்த ஓரிரு தசாப்தங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு கணிசமாக அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதேநேரம் இந்த எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதில் சிக்கலும் நீடித்து வருகிறது. சார்ஜ் செய்யும்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் வெடிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன.

இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக இந்தியன் ஆயில் நிறுவனம் பேட்டரிகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. லித்தியம் அயர்ன் பேட்டரிகளுக்கு மாற்றாக அலுமினியம் ஏர் பேட்டரிகளை தயாரிக்கும் பணியில் இந்தியன் ஆயில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இந்த அலுமினியம் பேட்டரிகளை மின்சாரம் மூலம் சார்ஜ் செய்ய தேவையில்லை என்றும், கேஸ் சிலிண்டரைப் போல மாற்றிக் கொள்ளலாம் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஆராய்ச்சித்துறை இயக்குனர் ராமகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த அலுமினியம் பேட்டரிகளின் பயன்கள் குறித்தும், அவற்றால் ஆட்டோமொபைல் துறையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்தும் ராமகுமார் ஈடிவி பாரத்திற்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அதனை இப்போது பார்க்கலாம்...

அலுமினியம் பேட்டரியை எப்படி ரீசார்ஜ் செய்வது? : அலுமினியம் பேட்டரியை பயன்படுத்த மின்சாரம் தேவையில்லை. இதனை ரீசார்ஜ் செய்ய அவசியமில்லை. அதேபோல் இந்த பேட்டரிகள் வெடிக்கும் என அச்சப்படவும் தேவையில்லை. பேட்டரியில் சார்ஜ் குறையும்போது பெட்ரோல் பங்க்குகள் அல்லது சார்ஜிங் மையங்களில் அவற்றைக் கொடுத்துவிட்டு புதிய பேட்டரியாக மாற்றிக் கொள்ளலாம். நாம் காலி கேஸ் சிலிண்டர்களை கொடுத்துவிட்டு மாற்றுவது போலத்தான் இதுவும்.

கேஸ் சிலிண்டரைப் போலவே, கார் வாங்கும்போது தனியாக வைப்புத் தொகை செலுத்தி பேட்டரியை வாங்கிக் கொள்ளலாம். இந்த வைப்புத் தொகை எவ்வளவு? பேட்டரியை மாற்றும்போது எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்? உள்ளிட்டவை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. லித்தியம் பேட்டரிகளுடன் ஒப்பிடும்போது இந்த அலுமினியம் பேட்டரிகளுக்கு பராமரிப்பு செலவு பாதியாகக் குறையும்.

அலுமினியம் பேட்டரிகள் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? : அலுமினியம் பேட்டரிகள் முதற்கட்டமாக 2024ஆம் ஆண்டு இறுதியில் பயன்பாட்டுக்கு வரும். அதற்கு முன்னதாக அலுமினியம் பேட்டரி வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அலுமினியம் பேட்டரிகளை பயன்படுத்தி எவ்வளவு தூரம் பயணம் செய்யலாம்?: அலுமினியம் பேட்டரிகள் தொடர்பான ஆராய்ச்சி இறுதி கட்டத்தில் உள்ளது. அண்மையில் அலுமினியம் பேட்டரி பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம் 450 கிலோ மீட்டர் வரை ஓடியது. அதே வாகனம் லித்தியம் பேட்டரியில் சுமார் 100 கிலோ மீட்டர் வரை மட்டுமே ஓடும்.

இதற்காக நீங்கள் எந்த ஆட்டோமொபைல் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளீர்கள்?: அலுமினியம் பேட்டரி கார்களை உற்பத்தி செய்ய மாருதி, மகேந்திரா, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளோம். அலுமினியம் பேட்டரிகளை பொருத்தினால், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் 500 கிலோ மீட்டருக்கும் மேல் ஓடுகிறது. மாருதி மற்றும் மகேந்திரா நிறுவன கார்களிலும் சோதனை செய்து வருகிறோம். காற்று மாசை குறைப்பதுதான் எங்களது முக்கிய நோக்கம்.

அலுமினியத்திலிருந்து பேட்டரி தயாரிக்கலாம் என்பதை எப்படி கண்டுபிடித்தீர்கள்?: உள்நாட்டிலேயே கிடைக்கும் மூலப்பொருட்களை வைத்து பேட்டரி தயாரிப்பது குறித்து ஆய்வு செய்தோம். அதில் அலுமினியம் முக்கிய மூலப்பொருளாக தெரிந்தது. அது நாட்டில் அதிகளவு கிடைக்கிறது. இதற்கு அரசும் ஒப்புதல் அளித்தது. இந்த அலுமினியம் பேட்டரிகள் குறித்த ஆராய்ச்சி, இஸ்ரேலில் உள்ள பார் இலன் பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதை அறிந்தோம்.

அந்த பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டபோது, அவர்கள் அந்த ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப உரிமங்களை ஃபினெர்ஜி (Finergy) என்ற நிறுவனத்துக்கு விற்றுவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் அந்த நிறுவனத்துடன் இணைந்து பேட்டரிகளை தயாரிக்க ஒப்பந்தம் செய்தோம். முதலில் இந்த வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்யவும், பிறகு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.

இந்த பேட்டரியில் 500 கிலோ மீட்டர்தான் அதிகபட்ச மைலேஜா? பேட்டரியின் மைலேஜை அதிகரிப்பது தொடர்பாக எங்களது ஆராய்ச்சியாளர்கள் ஃபினெர்ஜி நிறுவன விஞ்ஞானிகளுடன் இணைந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சியில் வெற்றி கிடைத்தால், 800 கிலோ மீட்டர் வரை மைலேஜ் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இ-கார்களுக்கு பேர்போன டெஸ்லா நிறுவனம் உங்களுடன் ஏன் இணையவில்லை? டெஸ்லா நிறுவனம் அலுமினியம் பேட்டரி தொழில்நுட்பத்தை எங்களுக்கு முன்பே கண்டறிந்துவிட்டது. ஆனால், பார் இலன் பல்கலைக்கழக ஆராய்ச்சியில் அவர்களுக்கு திருப்தி இல்லாததால் விலகிவிட்டார்கள். அதன்பிறகு ஃபினெர்ஜி நிறுவனத்தின் ஆராய்ச்சியில் நல்ல முன்னேற்றம் இருந்ததால் நாங்கள் அதோடு இணைந்தோம்.

அலுமினியம் பேட்டரிகளை பயன்படுத்துவதால் வாகன ஓட்டிகளுக்கு என்ன பயன்? அலுமினியம் பேட்டரி வாகன ஓட்டிகளுக்கு மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். காரணம் நாட்டில் அலுமினியம் அதிகளவு கிடைக்கிறது. அலுமினியம் பேட்டரிகளை மறுசுழற்சி செய்வதற்காக ஹிண்டல்கோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளோம். லித்தியம் பேட்டரியின் விலையில், பாதி விலைக்கு அலுமினியம் பேட்டரி கிடைக்கும்.

இதையும் படிங்க: குழந்தைகளை தாக்கும் நோரோ வைரஸ்.. எர்ணாகுளத்தில் 3 சிறுவர்கள் பாதிப்பு!

Last Updated : Jan 24, 2023, 6:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.