கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா, நேற்று (ஜூலை 26) தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்த ஒன்றிய பாஜக தலைமை வலியுறுத்தியது.
அதன்படி இன்று (ஜூலை 27) பெங்களூரில் உள்ள ஹோட்டல் கேபிடலில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக உயர்மட்டக் குழுவால் (Parliamentary board) பசவராஜ் பொம்மை முதலமைச்சர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூர் ராஜ்பவனில் உள்ள கிளாஸ் ஹவுஸில் நாளை (ஜூலை.28) காலை 11 மணியளவில் பசவராஜ் பொம்மைக்கு, ஆளுநர் தவார் சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்கவுள்ள பசவராஜ் பொம்மைக்கு, கட்சி மூத்த உறுப்பினர்கள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கர்நாடக முதலமைச்சராக பதவியேற்கும் பசவராஜ் பொம்மை - யார் இவர்?