ETV Bharat / bharat

Madhya Pradesh shocker: நாயை நடைபயிற்சி அழைத்து செல்வதில் ஏற்பட்ட தகராறு - 2 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை - Madhya Pradesh shocker

மத்திய பிரதேசம் இந்தூர் பகுதியில் வளா்ப்பு நாயுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது ஏற்பட்ட தகராறில் வங்கி காவலர் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிாிழந்தனர் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Gun Shoot out
Gun Shoot Out
author img

By

Published : Aug 18, 2023, 8:01 PM IST

இந்தூர் (மத்தியப் பிரதேசம்): மத்திய பிரதேசம் இந்தூர் பகுதியில் வளா்ப்பு நாயுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது ஏற்பட்ட தகராறில் வங்கி காவலர் துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு பேர் உயிாிழந்தனர் ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோரின் கஜ்ரானா காவல் நிலையப் பகுதியில் நேற்று இரவு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. பாங்க் ஆப் பரோடா வங்கி காவலர் ராஜ்பால் யாதவ் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு நபருக்கும் இடையே வளர்ப்பு நாயை நடைபயிற்சிக்கு அழைத்து செல்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறு வாக்குவாதமாக மாறியுள்ளது பின் ராஜ்பால் யாதவ் வீட்டிற்கு சென்று தனது துப்பாக்கியை எடுத்து வந்து சரமாாியாக சுட்டதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த துப்பாக்கி சுடு சம்பவத்தில் விமல் மற்றும் ராகுல் ஆகியோர் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக காவல் துறையினரால் அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தொிவித்துள்ளனர்.

துப்பாக்கி சுடு சம்பவத்தில் ஈடுபட்ட வங்கி காவலர் ராஜ்பால் யாதவ் இந்தூர் கஜ்ரானா காவல் நிலைய காவலர்களால் கைது செய்யப்பட்டு அவர் வைத்து இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். மேலும் கூடுதல் டி.ஜி.பி. அமரேந்திர சிங் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்துள்ளார்.

துப்பாக்கி சுடு சம்பவத்தில் காயமடைந்த ஆறு பேர் சிகிச்கைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். நாயை நடைபயிற்சிக்காக அழைத்து செல்வதில் ஏற்பட்ட தகராறு தற்போது வன்முறையாக மாறி இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த துப்பாக்கி சுடு சம்பவத்தை அருகில் இருந்த மாடியில் இருந்து ஒருவர் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது அதிக படியான நபர்களால் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: இடுக்கியில் கடையடைப்பு; தமிழ்நாடு-கேரள எல்லையில் காத்திருக்கும் சுற்றுலாப் பயணிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.