ETV Bharat / bharat

வங்கதேச அணி கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் மகுரா-1 தொகுதியில் 1,85,388 வாக்குகள் பெற்று வெற்றி..!

author img

By ANI

Published : Jan 8, 2024, 3:22 PM IST

Cricket Player Shakib Al Hasan: வங்கதேச அணியின் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கேப்டனும், அவ்மி லீக் கட்சி சார்பில் மகுரா-1 தொகுதியில் போட்டியிட்ட ஷகிப் அல் ஹசன் 1,85,388 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

Shakib Al Hasan
வங்கதேச அணி கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் 1,85,388 வாக்குகள் பெற்று அபார வெற்றி

வங்கதேசம்: ஒருநாள் கிரிக்கெட் தொடரில், வங்கதேச அணியின் கேப்டனாக இருக்கும் நட்சத்திர வீரர் ஷகிப் அல் ஹசன் மகுரா -1 தொகுதியில், அவ்மி லீக் கட்சி சார்பில் நின்று 1,85,388 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் என டாக்கா ட்ரிப்யூன் தெரிவித்துள்ளது. மேலும், ஹசனின் நெருங்கிய நண்பரான காசி ரெசவுல் ஹொசைன் 45, 993 வாக்குகள் பெற்றார்.

இதுகுறித்து டாக்கா ட்ரிப்யூன் கூறியதாவது, 12வது தேசிய தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. வங்கதேசத்தில் காலை 8 மணி அளவில் 42,024 வாக்கு மையங்கள் மூலம் 261,912 வாக்குச் சாவடிகளில் மாலை 4 மணி வரை 299 தொகுதிக்கான நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கோபால்கஞ்ச்-3 தொகுதியில் வெற்றி பெற்று, எட்டாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினரானார். ஹசீனா கட்சி 223 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது. ஹசீனா 2,49,962 வாக்குகளையும், எம்.டி.அதிகுர் ரகுமான் 6,999 வாக்குகளையும், மஹபுர் மொல்லா 425 வாக்குகளையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வங்கதேச அணியின் ஒருநாள் தொடரில் கேப்டனாக இருப்பவர் ஷகிப் அல் ஹசன். இவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆல்ரவுண்டர். தனது சுழற்பந்து வீச்சு மூலம் எதிரணியை திணறடித்து வந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் வங்கதேச அணிக்கு, கேப்டனாக இருந்து அணியை வழி நடத்தி லீக் சுற்று வரை அணியைக் கொண்டு சென்றார். பின் உலகக் கோப்பையில் இருந்து வங்கதேச அணி வெளியேறியது.

பின்னர், ஷகிப் அல் ஹசன் வங்கதேச அரசியலில் நுழைந்தார். இந்நிலையில் அவ்மி லீக் கட்சி சார்பில் மகுரா-1 தொகுதியில் போட்டியிட ஷகிப் அல் ஹசனுக்கு சீட் வழங்கப்பட்டது. அதன்படி, மகுரா-1 தொகுதியில் அவ்மி லீக் கட்சி சார்பில் போட்டியிட்டார். மகுரா-1 ல் மொத்தம் 152 வாக்குச் சாவடிகள் உள்ளன.

முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஷகிப் அல் ஹசனிடம், பிரதமர் ஷேக் ஹசீனா நடைபெறும் 12வது தேசிய தேர்தலில் மீண்டும் ‘ஒரு சிக்ஸர் அடிக்கலாம்’ என்றும், ‘நீங்கள் பேச்சு வார்த்தை நடத்தத் தேவையில்லை சிக்ஸர் அடிக்கலாம், விக்கெட் வீழ்த்தலாம்’ என தேர்தல் பிரச்சாரத்தில் கூறினார்.

இதையும் படிங்க: பில்கிஸ் பானு வழக்கு; 11 பேரின் விடுதலையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.