டெல்லி: 1971 ஆம் ஆண்டு வங்கதேசம் உருவாக வழிவகுத்த பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்று நேற்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையடுத்து இன்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன், பிரதமர் மோடி இன்று உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.
இதில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவை வலுப்படுத்தவும் ஆழப்படுத்தவும் இந்தியா தொடர்ந்து முயற்சித்துவருகிறது. இந்தியாவின் பிரதமராக பதவியேற்றதிலிருந்து, தனது முன்னுரிமையை வங்கதேசத்திற்கு வழங்கிவருகிறேன்.
தொற்றுநோய் காலங்களில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பெரும் ஒத்துழைப்பைக் கண்டுள்ளன. வங்கதேசத்தின் வெற்றியை உங்களுடன் கொண்டாடுவது இந்தியாவிற்கான மரியாதை. வங்கதேசத்தின் 50ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, போரில் உயிரிழந்த இரு நாட்டின் வீரர்களுக்கும், தங்கள் உயிரை தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த விரும்புகிறேன்" என்றார்.
இதையும் படிங்க: இந்திய ராணுவ வெற்றி நாளின் 50ஆவது ஆண்டு கொண்டாட்டம்