ஜெய்ப்பூர் : சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைப்பது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அல்வார் மக்களவை தொகுதி எம்.பி. மகந்த் பாலக்நாத்தின் பெயர் முதலமைச்சர் வேட்பாளர் ரேசில் முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கரன்பூர் தவிர்த்து மீதமுள்ள 199 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 25ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்நிலையில், இன்று (டிச. 3) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தொடக்கம் முதலே பாஜகவுக்கு ஏறுமுகமாக காணப்படுகிறது. 113 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் பாஜக ஏறத்தாழ ஆட்சியை அமைக்கும் சூழலில் உள்ளது.
இதையடுத்து பாஜக முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு குறித்து மும்முரம் அடைந்துள்ளன. முன்னாள் முதலமைச்சர் வசுந்தர ராஜே, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்டோர் முதலமைச்சர் ஓட்டத்தில் உள்ளனர். அதேநேரம், ஆல்வார் மக்களவை தொகுதி யோகி மகந்த் பாலக்நாத் முதலமைச்சர் ரேசில் முன்னணியில் உள்ளார்.
உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சமூகத்தை சேர்ந்தவரான யோகி மகந்த் பாலக்நாத் முதலமைச்சர் ரேசில் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. 40 வயதான மகந்த் பாலக்நாத், ராஜஸ்தான் மாநிலத்தின் டிஜாரா தொகுதியில் களமிறங்கி உள்ளார். அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் இம்ரான் கான் களம் கண்டு உள்ளார்.
-
Spiritual leader and Alwar MP, Mahant Balaknath top BJP contender for Rajasthan CM post
— ANI Digital (@ani_digital) December 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Read @ANI Story | https://t.co/CNUFtr328N#MahantBalaknath #Rajasthan #Alwar #Tijara #AssemblyResults2023 pic.twitter.com/Sc665fg4vf
">Spiritual leader and Alwar MP, Mahant Balaknath top BJP contender for Rajasthan CM post
— ANI Digital (@ani_digital) December 3, 2023
Read @ANI Story | https://t.co/CNUFtr328N#MahantBalaknath #Rajasthan #Alwar #Tijara #AssemblyResults2023 pic.twitter.com/Sc665fg4vfSpiritual leader and Alwar MP, Mahant Balaknath top BJP contender for Rajasthan CM post
— ANI Digital (@ani_digital) December 3, 2023
Read @ANI Story | https://t.co/CNUFtr328N#MahantBalaknath #Rajasthan #Alwar #Tijara #AssemblyResults2023 pic.twitter.com/Sc665fg4vf
இம்ரான் கானை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் யோகி மகந்த் பாலக்நாத் முன்னிலையில் உள்ளார். முதலமைச்சர் வேட்பாளராக யோகி மகந்த் பாலக்நாத் தேர்வு செய்யப்படும் நிலையில் உத்தர பிரதேச அடுத்து மற்றொரு மாநிலத்தை சாமியார் ஒருவர் ஆட்சி செய்யக் கூடும் எனக் கூறப்படுகிறது.
தேர்தல் பிந்தைய கருத்து கணிப்புகளின் முடிவில் ராஜஸ்தான் முதலமைச்சராக யோகி மகந்த் பாலக்நாத்திற்கு 10 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில், அடுத்த முதலமைச்சராக அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. உத்தர பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்திலும் சாமியார் முதலமைச்சராக உள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன.
இதையும் படிங்க : பாஜக தலைமை அலுவலகம் செல்லும் பிரதமர் மோடி! என்ன காரணம்?