ETV Bharat / bharat

மூன்றாவது மாடியில் இருந்து வீசப்பட்ட பச்சிளம் குழந்தை - டெல்லியில் கொடூரம் - Delhi news

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பின் 3ஆவது மாடியில் இருந்து பிறந்த குழந்தை வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3வது மாடியில் இருந்து வீசப்பட்ட பச்சிளம் குழந்தை - டெல்லியில் கொடூரம்!

author img

By

Published : Jan 10, 2023, 10:10 AM IST

டெல்லி: நியூ அசோக் விஹாரில் ஜெய் அம்பே என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் 3ஆவது மாடியில் இருந்து நேற்று (ஜன.9) குழந்தை கீழே வீசப்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு அருகில் சென்று பார்த்த போது, ஆண் குழந்தை ரத்த காயங்களுடன் கிடப்பது தெரிய வந்துள்ளது.

அதன்பின் அந்த குடியிருப்புவாசிகள் குழந்தையை மெட்ரோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு குழந்தை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், அடுக்குமாடி குடியிருப்பில் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த இளம்பெண் (20) ஒருவரை அழைத்து விசாரித்தனர். இந்த விசாரணையின்போது, தனக்கு பிறந்த குழந்தையை தானே கொன்று கழிவறையின் ஜன்னல் வழியாக வீசியதாக இளம்பெண் கூறியுள்ளார். மேலும், திருமணமாகாத தனக்கு குழந்தை பிறந்ததை அவமானமாக கருதிய அப்பெண், இந்த கொடூர முடிவை எடுத்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அந்த இளம்பெண்ணை கைது செய்த காவல் துறையினர், அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302 மற்றும் 201இன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: UP Rape: பெண்ணை கட்டிப்போட்டு தீ வைத்த கொடூரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.